பல்லடம், ஏப்.5: பல்லடம் அருகே குப்புசாமி நாயுடு புரத்தில் நிற்காமல் சென்ற தனியார் பேருந்தை அப்பகுதி பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். பல்லடம் ஒன்றியம் செம்மிபாளையம் ஊராட்சி குப்புசாமி நாயுடு புரத்தை சேர்ந்த ஒரு மாணவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூியில் படித்து வந்தார். இவர் நேற்று கோவையில் இருந்து பல்லடம் வழியாக திருப்பூர் செல்லும் தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது குப்புசாமி நாயுடு புரத்தில் பேருந்து நிற்காது என்று பேருந்து நடத்துனர் கூறி பல்லடத்திற்கான பேருந்து கட்டணத்தை வசூலித்து டிக்கெட் கொடுத்து உள்ளார்.
அவர் இது பற்றி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் புண்ணியமூர்த்திக்கு மற்றும் உறவினர்களுக்கும், பொதுமக்களுக்கும் செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த தனியார் பேருந்து குப்புசாமி நாயுடு புரம் வந்தபோது அங்கு திரண்டு நின்ற பொதுமக்கள் அந்த பேருந்தை மட்டும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் பேருந்து நிர்வாகம் வருத்தம் தெரிவித்ததோடு, இனி மேல் பேருந்து நின்று செல்ல உறுதி அளித்து கடிதம் அளித்தனர். தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.
The post நிறுத்தத்தில் நிற்காமல் செல்ல முயன்ற தனியார் பேருந்து சிறைபிடிப்பு: பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டதால் விடுவிப்பு appeared first on Dinakaran.