‘பிக்கி’ தெற்கு மண்டல தலைவராக கமல்ஹாசன் நியமனம்

சென்னை: இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (பிக்கி) ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு குழுவின் தெற்கு மண்டல தலைவராக கமல்ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசன் கூறியதாவது:
தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் உள்ளடக்கம், பார்வையாளர்கள் என்ற இருபெரும் சக்திகளே பிரதானமாக இருக்கின்றன. நாம் டிஜிட்டல் யுகத்தின் முதல் கட்டத்துக்குள் நுழையும் வேளை இது. இந்தியாவின் தொழில்நுட்ப பலங்களான அனிமேஷன் மற்றும் விஷூவல் எஃபெக்ட்ஸ் போன்றவை படைப்பாக்க உருவாக்கத்தில் உலகளாவிய உற்பத்தி மையமாக நம்மை நிலைநிறுத்துகிறது.

அனைத்து பிராந்தியங்கள், மொழிகள் மற்றும் கலாசாரங்களுக்கு இடையில் கூட்டிணைப்பை ஏற்படுத்துவது, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அனைவருக்கும் பிரதிநிதித்துவம் தரும் ஒரு தொழில்துறையை உருவாக்குவதற்கு முக்கிய பங்காற்றும். இந்தியாவின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையை 28 பில்லியன் டாலர் மதிப்பில் இருந்து 100 பில்லியன் டாலர் மதிப்பிலான தொழில்துறையாக உயர்த்துவதுடன், உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் படைப்புகளை உருவாக்கும்.

The post ‘பிக்கி’ தெற்கு மண்டல தலைவராக கமல்ஹாசன் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: