பள்ளிகளில் 1.17 லட்சம் மாணவ, மாணவியர் சேர்க்கை அமைச்சர் தகவல்

சென்னை: மார்ச் மாதம் முடிந்துள்ள நிலையில் நேற்று வரை அரசு பள்ளிகளில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 310 மாணவ மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 1ம் வகுப்பில் மட்டும் 1 லட்சத்து 5 ஆயிரத்து 286 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவச் செல்வங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதமும் மாணவர் சேர்க்கை நடக்கிறது. கல்வியின் துணை கொண்டு உலகை வெல்ல அரசுப் பள்ளிகளே தலைசிறந்த முறையில் அடித்தளமாக இருக்கும் என்றும் அமைச்சர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

The post பள்ளிகளில் 1.17 லட்சம் மாணவ, மாணவியர் சேர்க்கை அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: