இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், அனைத்து உலக நாடுகளின் பொருட்கள் மீதும் கூடுதல் வரி விதிக்கப்படும் அதனால் என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்றார். இந்நிலையில் வெள்ளை மாளிகை செய்தியாளர் கரோலின் லீவிட், “ஒவ்வொரு நாடும் அமெரிக்காவுக்கு விதிக்கக் கூடிய வரி குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி அமெரிக்க பால் பொருட்கள் மீது ஐரோப்பிய யூனியன் 50 சதவீத வரியும், அமெரிக்க அரிசி மீது ஜப்பான் 700 சதவீத வரியும், அமெரிக்க விவசாய பொருட்களுக்கு மீது இந்தியா 100 சதவீத வரியும், அமெரிக்க வெண்ணெய் மற்றும் சீஸ் மீது கனடா 300 சதவீத வரியும் விதிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் துரதிர்ஷ்டவசமாக, நீண்ட காலமாக இந்த நாடுகள் அமெரிக்காவிற்கு அதிக வரி விதித்து, அமெரிக்க தொழிலாளர்களை ஏளனம் செய்கிறது. இதனால் அமெரிக்க பொருட்களை அந்தச் சந்தைகளில் இறக்குமதி செய்வது சாத்தியமற்ற ஒன்று. இதனால் ஏராளமான அமெரிக்கர்கள் தங்கள் வர்த்தகத்தை இழந்துள்ளனர் என தெரிவித்துள்ளார். இதனால், வியட்நாம், ஐரோப்பிய ஒன்றியம், மெக்சிகோ, அயர்லாந்து, ஜெர்மனி, தைவான், ஜப்பான், தென் கொரியா, கனடா, இந்தியா, தாய்லாந்து, இத்தாலி, சுவிட்சர்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது. மேலும் இந்தியாவின் விவசாய பொருட்கள் மீது 100% வரை வரிகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
The post நாளை முதல் அமலுக்கு வர உள்ள அமெரிக்காவின் பரஸ்பர வரி: ட்ரம்ப் அதிரடி appeared first on Dinakaran.