குஜராத் டைடன்ஸ் அணியுடனான ஐபிஎல் 9வது லீக் போட்டியில் 20 ஓவர் வீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக, மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 ஐபிஎல் சீசனிலும் 3 போட்டிகளில் மும்பை அணி பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால் அபராதம் விதிக்கப்பட்டதோடு, அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அடுத்த போட்டியில் ஆட தடையும் விதிக்கப்பட்டது. அதனால், நடப்புத் தொடரில் சென்னை அணியுடன் மும்பை மோதிய போட்டியில் ஹர்திக் பங்கேற்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.