விழிப்புணர்வு ஏற்படுத்தி நீரின் அவசியத்தை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்

திருச்சி, மார்ச் 30: உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு துறையூர் கீரம்பூர் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடந்தது. சிறப்பு பார்வையாளராக மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு பொன்னாடை அணிவித்து பணியினை பாராட்டினார்.

அப்போது கூறிதாவது:
நீரின்றி அமையாது உலகெனின் என்கிற “உன்னத வாிகளுக்கேற்ப தண்ணீரே அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக உள்ளது. மேலும் தண்ணீர் விலை மதிப்பில்லா ஒரு பொருளாக இருப்பதால் நீடித்து நிலைத்து பல்லாண்டுகளுக்கு பயன்படுத்தும் வகையில் அதனை போற்றி பாதுகாத்திட வேண்டிய தருணத்தில் உள்ளோம்.

அதனடிப்படையில் தான் தண்ணீரின் அவசியத்தை அனைவaரும் அறிந்து கொள்ளும் வகையில் நேற்று திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கிராம சபை கூட்டத்தில் தண்ணீர் மற்றும் சுகாதார நெருக்கடியை தீர்க்க மாற்றத்தினை துரிதப்படுத்துதல், வான்தரும் மழைநீரினை சேகாித்தல், சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துதல், உடைந்த குழாய்களை சாி செய்து நீர் வீணாகாமல் பாதுகாத்தல், மறு சுழற்சிக்கு உட்படுத்துதல், நிலத்தடி நீரை சொிவூட்டல், நீரின் தூய்மையை பாதுகாத்தல் மற்றும் நீர் மாசுபாட்டைத் தடுத்தல், மரம் வளா்த்தலை ஊக்குவித்தல், வீட்டுக்கொரு மரம் வளா்த்தல், நீர் நிலைகளின் ஆக்கிரமிப்பை அகற்றி புனரமைத்தல், நீர் நிலைகளில் தண்ணீர் சேகரமாக உரிய கால்வாய்களை தூர்வாரி புனரமைத்தல், நீரின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு எடுத்து கூறுதல் மற்றும் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை கிராம சபையின் பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறப்பட்டது. சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. போதை பொருட்கள் பயன்படுத்துதலை தடுத்தல், குழந்தை பாதுகாப்பு அலகின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், குழந்தைகளுக்கான உதவி எண்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் – ஐஐ, கலைஞாின் கனவு இல்லம் திட்டம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம், பண்ணை மற்றும் பண்ணை சாரா வாழ்வாதார இயக்க நடவடிக்கைகள் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும், ஊரக பகுதிகளில் அரசு மற்றும் தனியார் சார்ந்த கட்டிடங்களில் மழைநீர் சேகாிப்பு அமைப்பு பணிகளை உருவாக்குதல், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் (ஊரகம்) தனிநபா் சுகாதாரம் மற்றும் சுற்றுபுற தூய்மைக்கான விழிப்புணா்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றுதல் தொடா்பான நிகழ்வுகள் கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

ஆகவே நீங்கள் அனைவரும் நீாின் அவசியத்தை உணா்ந்து செயல்படுவதுடன் உங்கள் குடும்பத்தினா், நண்பா்கள் மற்றும் அருகில் உள்ளவா்கள் அனைவருக்கும் நீரின் அவசியத்தை எடுத்துரைத்து அவா்களுக்கும் நீரின் அவசியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் தொிவித்தார். ஊரகப் பகுதிகளில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு பொன்னாடை அணிவித்து அவர்களது பணியினை கலெக்டர் பாராட்டினார். மேலும்் காதொலிக்கருவி வேண்டி கோாிக்கை மனு அளித்த செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உடனடியாக காதொலிக்கருவியை வழங்கினார்.

இந்நிகழ்வில் திட்ட அலுவலர் சுரேஷ் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா, உதவி இயக்குனர் ஊராட்சிகள் குமார் உள்ளிட்ட அரசுத்துறை உயர் அலுவலர்கள், துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன் (கிராம ஊராட்சி), சரவணகுமார் (வட்டார ஊராட்சி) மற்றும் வளர்ச்சித் துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post விழிப்புணர்வு ஏற்படுத்தி நீரின் அவசியத்தை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: