துவரங்குறிச்சி, டிச. 24: துவரங்குறிச்சி அருகே சேதமடைந்த மாநில சாலையை சீரமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறைக்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே மாநிலச் சாலையில் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள், போக்குவரத்து செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.
மேலும் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், போன்ற பெருநகரங்களுக்கு இப்பகுதியில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ள சாலை அதிக கனரக போக்குவரத்து கொண்ட சாலையாக உள்ளதால் பள்ளங்கள் அதிகமாக இருப்பதால் அளவில் ஏற்பட்டு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவோர்கள் பள்ளங்களை ஒதுக்கி ஓட்டும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் உள்ள சேதமடைந்த சாலையை சீர மை க்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறைக்கு இப்பகுதி பொதுமக்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.
