திருச்சி, தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றம்

திருவெறும்பூர், ஜன. 3: திருச்சி, தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்தில் மாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணை நான்கு சாலை சந்திப்பு பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதனால் பள்ளி – கல்லூரி செல்லும் மாணவர்களும், பணிகளுக்கு செல்லும் ஊழியர்களும், அவசர சிகிச்சைக்காக மரு த்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பது குறித்து தமிழக பள்ளிகல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் யாமொழிக்கு பொதுமக்களிடமிருந்து வாகன ஓட்டிகளிடம் இருந்து தகவல் வந்தது.

இதைதொடர்ந்து போக்குவரத்து நெரிசலை, அனைத்து துறை அதிகாரிகளை நேரில் வரவழைத்து, அன்பில் மகஷே் களத்தில் நேரில் ஆய்வு செய்தார். இந்நிலையில் திருச்சி மாவட்ட நிர்வாகம் நேற்று முதல் அதிரடியாக துவாக்குடி சுங்கச்சாவடியில் போக்குவரத்து மாற்றத்தை தொடங்கி உள்ளது.

அதன்படி, தஞ்சை, திருச்சி தேசிய நெடுஞ்சாலைகள் வரும் அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் பஞ்சப்பூர் புறவழிச்சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன.இதற்காக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, துவாக்குடி இன்ஸ்பெக்டர் கமலஹாசன் தலைமையிலான போலீசார் கண்காணிப்பில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Related Stories: