வீடு ஒதுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முற்றுகை போராட்டம்

திருச்சி, டிச. 25: திருச்சி, காந்தி மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பதிவு செய்தவர்களுக்கு வீடு ஒதுக்ககோரி முற்றுகை போராட்டம் நடத்தினர். திருச்சி மார்க்சிஸ்ட் கம்யூ சார்பில் நேற்று திருச்சி பாலக்கரை நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

திருச்சி, மாவட்ட கல்மந்தை கிளை செயலாளர்கள் மாகலிங்கம் மற்றும் சங்கீதா தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் பலர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். அப்போது திருச்சி தாராநல்லூர் கல்மந்தை பகுதியில் வாழும் மக்கள் பணம் செலுத்தி 4 ஆண்டுகளாக வீடுகளை ஒதுக்காமல் முறைகேடு செய்யக் கூடாது, 40ம் மேற்பட்ட வீடுகளுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்காமல் பால மாதங்களாக இழுத்தடித்து வருதை நிறுத்தி வீடுகளை ஒதுக்க வேண்டும்,

மார்க்சிஸ்ட் கம்யூவினர் 5 பேருக்கு விசாரணை முடிந்து பல மாதங்கள் நிறைவடைந்தும் வீடுகளை ஒதுக்காமல் இருப்பதற்கு காரணம் கேட்டு அக்கட்சியினர் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கு வந்த அதிகாரிகள் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்தை நடத்தி வீடு ஒதுக்கப்படும் என உறுதியளித்தன் பேரில் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

 

Related Stories: