துவாக்குடி அருகே வெளிநாட்டு மதுபானம் கடத்திய வாலிபர் கைது: பைக், மதுபாட்டில்கள் பறிமுதல்

திருவெறும்பூர், ஜன. 3: துவாக்குடி அருகே வெளிநாட்டு மதுபானம் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பைக், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. துவாக்குடி சுங்கச்சாவடி அருகே இன்ஸ்பெக்டர் கமலஹாசன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், கே.கே.நகரை சேர்ந்த பாலசுப்ரமணியன் மகன் கார்த்திக் (26) என்பதும், அவர் தனது பைக்கில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 10 வெளிநாட்டு மதுபாட்டில்களை புத்தாண்டு பார்ட்டிக்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கார்த்திக்கை கைது செய்து, பைக் மற்றும் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

Related Stories: