பல்லடம், மார்ச் 29: பல்லடம் தேர்வு நிலை நகராட்சி மன்றக் கூட்டம் தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தலைமையில் மன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையாளர் மனோகரன்,கவுன்சிலர்கள்,பல்வேறு பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முதல் நிலை நகராட்சியாக இருந்த பல்லடம் நகராட்சியை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
பல்லடம் அறிஞர் அண்ணா மத்திய பேருந்து நிலைய விரிவாக்கப் பணிக்கு ரூ.1.40 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கல்லம்பாளையம்,சேடபாளையம்,எஸ்.ஏ.பி. நகர், மாணிக்காபுரம் சாலை குட்டைக்கு அருகில், கொசவம்பாளையம் சாலை,பனப்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள ரேஷன் கடைகளின் முன்பு பொதுமக்கள் நலன் கருதி ரூ.7.40 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் தரைக்கற்கள் தளம் அமைத்தல் பணி மேற்கொள்ளுதல் உள்பட 57 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
The post பல்லடம் நகர் மன்ற கூட்டம் 57 தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.