உடுமலை, மார்ச் 29: உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் விளையாட்டு விழா,போக்சோ சட்டம் விழிப்புணர்வு, பெண் கல்வி பாதுகாப்பு ஆகிய முப்பெரும் விழாக்கள் நடைபெற்றன. தலைமை ஆசிரியர் விமலா தலைமை தாங்கினார். பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சரவணன் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம் போக்சோ சட்டம் பற்றிய விழிப்பு ணர்வை பெற்றோர்களிடம் ஏற்படுத்தினார்.
ஆண்டியகவுண்டனூர் பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேலு பெண் கல்வி பாதுகாப்பு குறித்து சிறப்புரையாற்றினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சரவணன் உடற்கல்வியின் அவசியம் குறித்து பேசினார். தொடர்ந்து குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பெற்றோர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி உதவி ஆசிரியர் சுதா நன்றி கூறினார்.
The post பூலாங்கிணறு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா appeared first on Dinakaran.