சென்னை: 500 கி.மீ. சாலைகளை பழுதுபார்த்து செப்பனிட ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று வனம் மற்றும் கதர்த்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்து பேசியதாவது: தமிழ்நாட்டில் தற்போது 26,450.22 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு வனப் பரப்பு இங்கு இருக்கிறது. 4 ஆண்டுகளில், பலவித வன விலங்குகளைப் பாதுகாக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது. இதுவரை 83 மரகதப் பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் 17 மரகதப் பூங்காக்களை உருவாக்கும் பணிகள் முன்னேற்றத்தில் இருந்து கொண்டிருக்கின்றன. மேலும், இந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் வன உயிரினங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. பெரும்பாலான உறுப்பினர்கள் வனப் பகுதியிலுள்ள சாலைகள் குறித்து கேட்டார்கள். அங்கு சாலைகள் அமைப்பதற்காக, அதாவது 500 கி.மீ. சாலைகளை பழுதுபார்த்து செப்பனிடுவதற்காக கிட்டத்தட்ட ரூ.250 கோடி நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
The post 500 கி.மீ. வன சாலைகளை செப்பனிட ரூ.250 கோடி appeared first on Dinakaran.