திருப்பூர்: திருப்பூர் பனியன் நிறுவனங்களின் மூலப்பொருளான நூல் விலை கிலோவுக்கு ரூ.3 உயர்ந்துள்ளது. ரூ.220 முதல் ரூ.380 வரை விற்பனையாகி வந்த நூலின் விலை அனைத்து ரகங்களிலும் ரூ.3 அதிகரித்துள்ளது. பருத்தி வரத்து குறைவு மற்றும் நூலுக்கான தேவை அதிகரிப்பை அடுத்து நூல் விலை உயர்ந்துள்ளது.