பள்ளி சீருடை தைக்க அளவெடுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல் டெய்லர்கள், ஆசிரியை கைது

மதுரை: சீருடை அளவெடுக்கும்போது, பள்ளி மாணவியிடம் அத்துமீறியதாக டெய்லர் உள்ளிட்ட 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவிகளுக்கு சீருடை தைப்பதற்காக பள்ளி நிர்வாகம் சார்பில் ஆண் மற்றும் பெண் டெய்லர்களை அழைத்து வந்துள்ளனர். கடந்த 24ம் தேதி, இருவரும் சீருடைகளை தைப்பதற்காக மாணவிகளிடம் அளவெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 10ம் வகுப்பு படிக்கும் மாணவி எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனால், அங்கிருந்த ஒரு ஆசிரியை, அவர் தான் அளவெடுப்பார் என வற்புறுத்தியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து ஆண் டெய்லர், மாணவிக்கு அளவெடுத்தார். அப்போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அந்த மாணவி தரப்பில் மதுரை நகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார், அளவெடுத்த டெய்லர் தேனி மாவட்டம் போடியை சேர்ந்த பாரதிமோகன் (60), கட்டாயப்படுத்திய ஆசிரியை சாரா, உடந்தையாக இருந்த பெண் டெய்லர் கலாதேவி (62) ஆகியோர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 3 பேரையும் போலீசார் கைது செய்து தேனி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

The post பள்ளி சீருடை தைக்க அளவெடுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல் டெய்லர்கள், ஆசிரியை கைது appeared first on Dinakaran.

Related Stories: