சிபிஐயில் பணியாளர் பற்றாக்குறை டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கு நேரடி நியமனம்: நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

புதுடெல்லி: பணியாளர் மற்றும் பயிற்சிதுறை தொடர்பான நிலைகுழு வின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சிபிஐயில் பல்வேறு பதவிகள் காலியாக இருப்பது கவலைக்குரியது. இது புலனாய்வு விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும். காலி பணியிடங்களுக்கு மாநிலங்களை எதிர்பார்ப்பதை விட எஸ்எஸ்சி, யுபிஎஸ்சி அமைப்புகள் அல்லது இதற்காக பிரத்யேகமான தேர்வுகளை நடத்தி டிஎஸ்பி,இன்ஸ்பெக்டர்,சப் இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கு ஆட்களை நியமிக்க வேண்டும்.

அதே போல்,சைபர் குற்றம்,தடய அறிவியல், நிதி மோசடி உள்ளிட்ட பிரிவுகளுக்கான ஆள் பற்றாக்குறையை போக்க நேரடி நியமனங்களை செய்ய வேண்டும். எட்டு மாநிலங்கள் சிபிஐ விசாரணைக்கான பொது ஒப்புதலை திரும்பப் பெற்றுள்ளன. இது ஊழல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை விசாரிக்கும் திறனை கட்டுப்படுத்துகிறது. இந்த சிக்கலை தீர்க்க, தேசிய பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டை பாதிக்கும் வழக்குகளுக்கு மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் வழக்குகளை விசாரிக்க சிபிஐக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post சிபிஐயில் பணியாளர் பற்றாக்குறை டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கு நேரடி நியமனம்: நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை appeared first on Dinakaran.

Related Stories: