புலி தாக்கி பழங்குடியின வாலிபர் பலி

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தற்போது வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஊட்டி அருகே கல்லக்கோடு மந்து பகுதியை சேர்ந்த தோடர் பழங்குடியின வாலிபர் கேந்தோர் குட்டன் (38), நேற்று முன்தினம் தனது வளர்ப்பு எருமைகளை மேய்ப்பதற்காக கவர்னர் சோலை பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் இரவு வரை வீடு திரும்பவில்லை என தெரிகிறது.

இந்நிலையில், நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறை ஊழியர்கள் காட்டிற்குள் குட்டன் உடலில் காயத்துடன் சடலமாக கிடந்தார். அவர் சிறுத்தை அல்லது புலி தாக்கி உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த நிலையில் வன விலங்குகள் பழங்குடியின மக்களை தாக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பலியான வாலிபரின் உடலை வாங்க மறுத்து பொதுமக்கள், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post புலி தாக்கி பழங்குடியின வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: