மியாமி ஓபன் கால்இறுதியில் ஸ்வியாடெக்கை வீழ்த்திய அலெக்ஸாண்ட்ரா

மியாமி: அமெரிக்காவில் நடந்துவரும் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த கால்இறுதி போட்டியில், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், 6-7, 6-4, 7-6 என அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ செருண்டோலோவை வீழ்த்தினார். மகளிர் ஒற்றையர் 3வது கால் இறுதியில் 19 வயதான பிலிப்பைன்சின் அலெக்ஸாண்ட்ரா ஈலா, 6-2, 7-5 என 2ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார். மற்றொரு கால்இறுதியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-4, 6-7, 6-2 என இங்கிலாந்தின் எம்மா ராடுகானுவை வீழ்த்தினார்.

The post மியாமி ஓபன் கால்இறுதியில் ஸ்வியாடெக்கை வீழ்த்திய அலெக்ஸாண்ட்ரா appeared first on Dinakaran.

Related Stories: