தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை : தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் மாநில செயலாளர் விஜயராகவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோவில் குடமுழுக்கு விழா ஏப்ரல் 4ம் தேதி நடைபெற உள்ளது. முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படும் மருதமலை முருகன் கோவில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த உத்தரவிட வேண்டும். கடந்த 2020ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, அரசுக்கு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தும்படி அனைத்து செயல் அலுவலர்களுக்கும் அறிவுறுத்தி அரசாணை பிறப்பிக்க வேண்டும்,” என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மருதமலை முருகன் கோவில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட வேறொரு வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுதாரரின் கோரிக்கை குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, ஏற்கனவே மருதமலை முருகன் கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்தக் கோரிய வழக்குடன் சேர்த்து இந்த வழக்கையும் நாளை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டார்.

The post தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: