பீகார் மாநிலத்திலிருந்து வேலைக்கு அழைத்து வந்த 9 சிறுவர்கள் மீட்பு: 3 ஏஜென்டுகள் கைது

தண்டையார்பேட்டை: பீகார் மாநிலத்திலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தது. ரயிலில் இருந்து இறங்கிய 3 பேர், 9 சிறுவர்களை அழைத்து வந்தனர். சந்தேகமடைந்த ரோந்து போலீசார், அவர்களை பிடித்து சென்ட்ரல் ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். மேலும் பீகார் மாநிலத்தில் இருந்து 13, 14, 15 வயதுள்ள 9 சிறுவர்களை தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் ஓட்டல் உள்ளிட்ட வேலையில் அமர்த்த அழைத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து சிறுவர்களை அழைத்து வந்த 3 ஏஜெண்டுகளிடம் விசாரித்தபோது, உத்திரபிரதேசத்தை சேர்ந்த சைலேஷ் ராஜ்பகர் (21), பீகார் மாநிலத்தை சேர்ந்த அஜய்குமார் (28), சுரேந்தர் ரவாத் (50) என்பதும், பீகார் மாநிலத்தில் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்த சிறுவர்களில் ஆசைவார்த்தை கூறி ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அழைத்து வந்து கேரளா, திருப்பூர், திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அனுப்பிவைக்க இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மீட்கப்பட்ட 9 சிறுவர்களை ராயபுரத்தில் உள்ள சிறுவர்கள் காப்பகத்தில் தங்கவைத்துள்ளனர். சிறுவர்களின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். ேபாலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சென்ட்ரல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பீகார் மாநிலத்திலிருந்து வேலைக்கு அழைத்து வந்த 9 சிறுவர்கள் மீட்பு: 3 ஏஜென்டுகள் கைது appeared first on Dinakaran.

Related Stories: