அரிஸ்டோ மேம்பாலத்தில் கார் மீது கண்டெய்னர் சரிந்து விழுந்தது

திருச்சி, பிப். 25: திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தில் கார் மீது கண்டெய்னர் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. திருச்சி மன்னார்புரம் பகுதியில் இருந்து மத்திய பேருந்து நிலையம் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அரிஸ்டோ மேம்பாலத்தில் லாரி திரும்பும்போது அவ்வழியே வந்த கார் மீது கண்டெய்னர் சாய்ந்தது. இதில், கார் சேதமடைந்ததுடன் காரில் இருந்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்த விபத்தால் அரிஸ்டோ பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சாய்ந்த கண்டெய்னரை கிரேன் மூலம் தூக்கி அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இதுகுறித்து தெற்கு போக்குவரத்து பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: