தொட்டியம் அருகே குடும்ப தகராறு 3 பெண்களை வெட்டிய வாலிபர் சிறையிலடைப்பு

தொட்டியம், மார்ச் 4: திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா ஆயினபட்டி குடித்தெருவை சேர்ந்தவர் பொன்னார் (29). இவருக்கும் லாவண்யா(23). என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து ஒரு மகன் உள்ளார். குடும்ப தகராறு காரணமாக, லாவண்யா கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் பொன்னார் தனது மனைவி தங்கியிருந்த வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பொன்னார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் லாவண்யாவை வெட்ட முயன்றார்.

இதைத்தடுக்க வந்த உறவினர்கள் சரண்யா(26) மற்றும் கன்னியம்மாள்(54), ஆகியோரையும் பொன்னார் வெட்டினார். இதில் லாவண்யாவுக்கு கைகளிலும், சரண்யாவிற்கு வலது கை விரலிலும், கன்னியம்மாளுக்கு தலை மற்றும் தோள்பட்டையிலும் படுகாயம் ஏற்பட்டது. மூவரும் சிகிச்சைக்காக தொட்டியம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Related Stories: