திருச்சி டூவீலர் திருடியவர் கைது

திருச்சி, மார்ச் 2:திருச்சியில் டூவீலர் திருடியவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி தஞ்சை சாலை பூக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் மாலிக்பாஷா (48). இவர் பிப்.26ம் தேதி கிருஷ்ணாபுரம் போலீஸ் பூத் அருகே தனது டூவீலரை நிறுத்தி வைத்திருந்தார்.

பின்னர் வந்து பார்த்தபோது அங்கு நின்று கொண்டிருந்த டூவீலர் மாயமானது. இதுகுறித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து வடக்கு தாராநல்லூர் காமராஜர் நகரைச் சேர்ந்த மணியரசன்(42) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த டூவீலரை பறிமுதல் செய்தனர்

 

Related Stories: