ஆட்டோ திருடியவர் கைது

திருச்சி, பிப்.26: திருவானைக்காவல் பகுதியில் ஆட்டோ திருடியவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி திருவானைக்காவல் மேல கொண்டையம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில்வேல் (24). இவர் பிப்.23ம் தேதி இரவு வீட்டின் அருகே தனது ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார்.

மறுநாள் பார்த்தபோது ஆட்டோ மாயமானது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசில் கார்த்திகேயன் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து திருவானைக்காவல் கொண்டையம் பேட்டையை சேர்ந்த கார்த்திகேயன் (24) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும், அதே பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் (19) என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: