திருவெறும்பூர், பிப். 27: திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள உள்ள துவாக்குடி வடக்கு மலை சொசைட்டி தெருவை சேந்தவர் சத்தியமூர்த்தி (47). இவரது மகன் அம்பேத்கார்தாசன் (25). இவர் ஐடிஐ முடித்து விட்டு வேலை கிடைக்காத விரக்தியில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த அம்பேத்கார்தாசன் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உடனடியாக தாய் பிரபாவதி மற்றும் அருகில் இருந்தவர்கள் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அம்பேத்கார்தாசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தந்தை சத்தியமூர்த்தி துவாக்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.
