திருப்பூர், மார்ச் 26: திருப்பூர் அவிநாசி ரோடு காந்தி நகரில் உள்ள அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் தங்கள் கணக்கை சோதனை செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் அவினாசி ரோடு காந்திநகரில் உள்ள அஞ்சலகத்தில் சிறு சேமிப்பு கணக்கு பிரிவை சேர்ந்த 2 பேர் பணியில் முறைகேடு செய்துள்ளது கணக்குத் தணிக்கையில் தெரிய வந்துள்ளது.
நடந்த முறைகேட்டின் காரணமாக பொதுமக்கள் அந்த அஞ்சலகத்தில் தொடங்கிய மற்றும் கட்டிய சிறு சேமிப்பு கணக்குகள் புத்தகத்தில் சரியாக வரவு வைக்கப்பட்டுள்ளதா என துணை அஞ்சல் அதிகாரியிடம் சரிபார்த்து கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் செலுத்திய தொகை மற்றும் சிறுசேமிப்பு புத்தகத்தில் வரவு வைத்த தொகையில் மாறுதல் உள்ளதா எனவும், பின்னாளில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க சேமிப்பு கணக்கை சரிபார்த்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post அஞ்சலக சேமிப்பு கணக்கில் சரி பார்த்துக் கொள்ள அழைப்பு appeared first on Dinakaran.