திருப்பூர், மார்ச் 26: திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள செல்போன் கடையில் நேற்று முன்தினம் மாலை தனது மகனுடன் வந்த பெண் ஒருவர் மகன் செல்போனை எக்ஸ்சேஞ்ச் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து, கடையில் இருந்த ஊழியர்கள் செல்போன்களை எடுத்து காட்டியுள்ளனர். தொடர்ந்து தனது மொபைலுக்கு டெம்பர் கிளாஸ் ஒட்ட வேண்டும் என செல்போனின் பேக் கவரை கழட்டி கொடுத்துள்ளார். பின்னர் கடை ஊழியர்கள் டெம்பர் கிளாஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மகனுக்கு காண்பிக்கப்பட்ட 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் ஒன்றை அந்த பெண் எடுத்து, டெம்பர் கிளாஸ் மாற்றுவதற்கான தொகை மட்டும் கொடுத்துவிட்டு மகனுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து செல்போன் காணவில்லை என ஊழியர்கள் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்தபோது மகனுடன் வந்த பெண் செல்போனை தனது பேக் கவரில் பொருத்திக்கொண்டு திருடி சென்றது தெரியவந்தது. தற்பொழுது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. இது குறித்து தெற்கு காவல் நிலையத்தில் செல்போன் கடை உரிமையாளர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
The post திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் செல்போன் திருடிய பெண் கேமராவில் சிக்கினார் appeared first on Dinakaran.