விசாகப்பட்டினத்தில் லக்னோவுடனான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான கே.எல்.ராகுல் ஆடாதது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது. லக்னோ அணிக்கு எதிராக கடைசி ஓவரில் டெல்லி அணி திரில் வெற்றி பெற்றதை அந்த அணி வீரர்கள் உற்சாகமாக கொண்டாடிய சமயத்தில், கே.எல். ராகுல் தந்தை ஆன செய்தி, அவரது மனைவியும் நடிகையுமான ஆதியா ஷெட்டியின் சமூக வலைதளப் பக்க பதிவு மூலமாக தெரிய வந்தது. அதனால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் திளைத்த டெல்லி கேப்டன் அக்சர் படேல் உள்ளிட்ட வீரர்கள், குழந்தையை தாலாட்டி கொஞ்சுவது போல நடித்து, ‘எங்கள் குடும்பம் விரிவடைந்துள்ளது. எங்கள் குடும்பம் கொண்டாடுகிறது’ என தலைப்பிட்டு ராகுலுக்கு வாழ்த்து வீடியோ வெளியிட்டனர். அதற்கு ராகுல் நன்றி தெரிவித்துள்ளார்.
The post தந்தையானார் ராகுல்: இரட்டை மகிழ்ச்சியில் டெல்லி கேபிடல்ஸ் appeared first on Dinakaran.