மாநிலங்களவையில் பேரிடர் மேலாண்மை மசோதா நிறைவேற்றம்

புதுடெல்லி: பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

* பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ல் திருத்தங்கள் செய்யும் பேரிடர் மேலாண்மை சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா, அனைத்து விதமான பேரிடர்களையும் மாநில அரசுகள் சிறந்த முறையில் கையாள உதவும் வகையில் திருத்தப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்தது. எதிர்க்கட்சிகள் பரிந்துரைத்த அத்தனை திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டன.

* மக்களவையில், 100 ஆண்டுகள் பழமையான பாய்லர் மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா பாய்லர் சட்டம் 1932க்கு மாற்றாக கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே கடந்த டிசம்பரில் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

* ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான 2 மசோதாக்களை ஆய்வு செய்வதற்கான நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க மக்களவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி வாரம் முதல் நாள் வரையிலும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post மாநிலங்களவையில் பேரிடர் மேலாண்மை மசோதா நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: