ஓடிடி உரிமைகளை விற்கவில்லை என்றும் அதன்படி படத்தின் வெளியீடு தேதி அறிவிக்க படாததால் ஓடிடி தலங்களுக்கு விற்கமுடியவில்லை என தங்களது மனுவில் தெரிவித்திருந்தனர். இதனால் தங்களுக்கு நிதி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அதே போல உதவி செய்த பணத்தில் 50 சதவீதம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் மார்ச் 27 இன்று காலை 10.30 மணி வரை இப்படத்தை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்திருந்தனர். இன்றைய தினம் 10.30 க்கு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இன்றைய தினம் அந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ரூ.7 கோடி உடனடியாக டெபாசிட் செய்ய என்ற உத்தரவும், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் 48 மணி நேரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் இடைக்கால தடை மீட்பது தொடர்பான முழுமையான உத்தரவு வெளியாகவில்லை. இன்னும் சற்று நேரத்தில் உத்தரவு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
The post வீர தீர சூரன் படத்தை தயாரித்த ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனம் ரூ.7 கோடி டெபாசிட் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் ஆணை..!! appeared first on Dinakaran.