ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளருக்கு 3 ஆண்டு சிறை

நாகர்கோவில் : குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே காக்கமூர் பகுதியை சேர்ந்தவர் ரவி அசோகன். இவர் தனது சொத்தின் பத்திர சான்றொப்பம் இட்ட நகல் கேட்டு, கடந்த 18.12.2012 அன்று இடலாக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தார். இதற்கு சார்பதிவாளராக இருந்த சுயம்புலிங்கம், ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை நாகர்கோவில் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் விசாரித்து, சார்பதிவாளர் சுயம்புலிங்கத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

The post ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளருக்கு 3 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: