தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு அமைச்சர் பதில் சொல்லுங்கள் என்றார். அப்போது சில திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் மாமாவுக்கு பதில் சொல்லுங்கள் என்றனர். இதனால், அவையில் மீண்டும் சிரிப்பலை ஏற்பட்டது.
தொடர்ந்து கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், தனியார் சோலார் பேனல் அமைப்பது குறித்தும், தனியாருடைய இணைப்புகள் குறித்தும் உறுப்பினர் இங்கே எடுத்து சொல்லியிருக்கிறார். மிக விரைவாக அவர்களுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன” என்றார்.
மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் ஒப்பந்ததாரர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
சட்டப்பேரவையில் நேற்று எஸ்.பி.வேலுமணி (அதிமுக) பேசும்போது, மரக்காணம், ராமநாதபுரத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அறிவிப்புகள் என்ன ஆனது, மீஞ்சூரில் உள்ள திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது ஏன்?
அமைச்சர் கே.என்.நேரு: மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் ஒப்பந்ததாரர் சரியாக செயல்படவில்லை. 100 எம்.எல்.டி.க்கு பதிலாக 40 எம்.எல்.டி. என்ற அளவில் தான் கிடைத்தது. தற்போது அனைத்து எந்திரங்களும் பழுதுபட்டு, பணியாற்றுகிறவர்களுக்கு சம்பளம் தராமல் தண்ணீரும் தராமல் இருந்தார். கோர்ட்டுக்கு சென்றார். தற்போது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அங்கு, மாற்று உற்பத்தி தொடங்கும் நிலை ஏற்படுத்தப்படும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி தரப்படும். மரக்காணம் பகுதியில் ஏரியை உருவாக்கலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அதன்மூலம் குடிநீர் தரப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு பதில் புதிய குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டு, குடிநீர் வழங்க இருக்கிறோம். கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு கூடுதலாக உற்பத்தி செலவு தேவைப்படுவதால், காவிரி நீரை அடிப்படையாக கொண்டு ரூ.3,500 கோடியில் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம். இந்த திட்டம் நிறைவேறும்போது ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தண்ணீர் தடையின்றி தண்ணீர் வழங்கப்படும் என்றார்.
சட்டப்பேரவையில் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி: பெருநகர சென்னை மாநகராட்சி, திருவான்மியூர் மேல்நிலைப்பள்ளியில், 5 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், 25-2-2019 அன்று தமிழக ஆளுநர் மற்றும் அன்றைய முதல்வர் எடப்பாடி ஆகியோரால் காலை சிற்றுண்டி திட்டம் துவங்கப்பட்டது. எடப்பாடியார் தொடங்கி வைத்த உன்னத திட்டமான காலை சிற்றுண்டி திட்டத்தை திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பின்பு, காலை உணவு திட்டமாக விரிவாக்கம் செய்துள்ளது என்பது பாராட்டத்தக்கது.
சமூக நலன்-மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன்: காலை உணவு திட்டத்தை பற்றி கூறினார். எங்களுடைய முதல்வர் பள்ளி மாணவர்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடியபோது, மாணவர்கள் சோர்வாகயிருப்பதை அறிந்துதான் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தார். காலை உணவுத் திட்டம் முதற்கட்டமாக முதல்வர் 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி 1,545 பள்ளிகளில் பயிலும் சுமார் 1 லட்சத்து 15,000 மாணாக்கர்களுக்காக தொடங்கினார். பிறகு, இத்திட்டத்தின்மூலம் மாணாக்கர்களின் கல்வித்திறன் அதிகரிப்பு, வளர்ச்சி அதிகரிப்பு, ஊட்டச்சத்து உயர்வு உள்ளிட்ட பலன்கள் ஏற்பட்டன என்பதை அறிந்து இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது, கிராமங்களிலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 31,008 பள்ளிகளில் 15 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்த திட்டம், இந்த ஆண்டு முதல் நகர பகுதிகளில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் விரிவாக்கப்படும்.
The post சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை மாப்பிள்ளை என்ற அதிமுக எம்எல்ஏ appeared first on Dinakaran.