அமெரிக்கர்கள் விரும்பும் ஆவின் நெய், கள் இறக்க அனுமதிப்பது குறித்து முதலமைச்சர் பரிசீலனை : சட்டப்பேரவையில் அமைச்சர்கள் அறிவிப்பு!!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்: ஆவின் பொருட்கள் சிறிய கிராமங்களில் விற்பனை செய்ய முடியாத சூழல் உள்ளது, இதற்கு தீர்வு காண வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் எழுப்பிய கேள்விக்கு, “ஆவின் மூலம் தரமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுகிறன. ஆவின் நெய் உலகத்தரம் வாய்ந்தது; ஆவின் நெய் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ரூ. 50 விலை கூடுதலாக இருந்தாலும் அமெரிக்கர்கள் ஆவின் நெய் தான் விரும்புகின்றனர். ஆவின் பொருட்கள் கிராமங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். “என்றார்.

வனத்துறை அமைச்சர் பொன்முடி : கள் இறக்க அரசு அனுமதி தருமா? ஆவின் போன்று விற்பனை கூடங்கள் அமைக்கப்படுமா? என்றும் கள் மீதான தடையை நீக்கி, கள், பதநீரை அரசே கொள்முதல் செய்து விற்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த ரூபி மனோகரனுக்கு அமைச்சர் பொன்முடி, “கள் இறக்க அனுமதிப்பது குறித்து முதலமைச்சர் எதிர்காலத்தில் பரிசிலீப்பார்,”இவ்வாறு தெரிவித்தார். நாங்குநேரியில் பனைப் பொருட்களுக்கான நவீன விற்பனை காட்சிக் கூடம் அமைக்கப்படுமா என்று சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் பொன்முடி, “376 பனை வெல்லம் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. பனை மரம் வளர்ப்போர் வளர்ச்சிக்கு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். நாங்குநேரியில் பனை பொருட்களுக்கான நவீன விற்பனை காட்சிக்கூடம் அமைக்க பரிசீலனை செய்யப்படும், “என்றார்.

The post அமெரிக்கர்கள் விரும்பும் ஆவின் நெய், கள் இறக்க அனுமதிப்பது குறித்து முதலமைச்சர் பரிசீலனை : சட்டப்பேரவையில் அமைச்சர்கள் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: