புதுடெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் மூட்டை மூட்டையாக பாதி எரிந்த நிலையில் கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டுள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் நடைமுறைக்கு பதிலாக தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் கொண்டு வர ஒன்றிய அரசு மீண்டும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், பாஜ தலைவர் நட்டா, காங்கிரஸ் தலைவர் கார்கேவுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின் பேட்டி அளித்த ஜெகதீப் தன்கர் கூறுகையில்‘‘கடந்த 2014ல் நிறை வேற்றப்பட்ட தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருக்காவிட்டால் இதுபோன்ற பிரச்னைகளை இன்றைக்கு நாம் எதிர்கொண்டிருக்க மாட்டோம். எனவே இந்த சட்டம் தொடர்பாகவும் கார்கே, நட்டாவின் கருத்துக்களை கேட்டறிந்துள்ளேன். விரைவில் அனைத்து கட்சி தலைவர்களின் கருத்தை கேட்டறிந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
The post டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விவகாரம் மாநிலங்களவை தலைவர் தன்கர் கார்கே, நட்டாவுடன் ஆலோசனை: தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் குறித்து கருத்து கேட்பு appeared first on Dinakaran.