பனியன் நிறுவன உரிமையாளர் தற்கொலை

 

திருப்பூர், மார்ச் 24: திருப்பூர் மங்கலம் அடுத்த இடுவாய் அம்மன் நகரை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (43). இவருடைய மனைவி ஞானம்பிகா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். விநாயக மூர்த்தி பனியன் நிறுவனம் நடத்தி வந்தார். மது பழக்கத்திற்கு அடிமையான விநாயகமூர்த்தி அடிக்கடி மது அருந்தி வந்தார். இந்நிலையில், குடும்பத்தார் மது பழக்கத்தை கைவிடுமாறு விநாயகமூர்த்தியிடம் கூறியுள்ளனர்.

இதனால், மனமுடைந்த விநாயகமூர்த்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைபற்றி விசாரணை நடத்தினர். மேலும், பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பனியன் நிறுவன உரிமையாளர் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: