ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி தடை நீக்க வேண்டும்: தலிபான்களுக்கு ஐநா அழைப்பு

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க விதிக்கப்பட்ட தடையை தலிபான் நீக்க வேண்டுமென ஐநா வலியுறுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அங்கு பெண்களுக்கான பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றது. பெண்கள் இடைநிலை மற்றும் உயர்கல்விக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்கள் கல்விக்கான தடையை நீக்க ஐநா அழைப்பு விடுத்துள்ளது.

யுனிசெப் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானில் பெண்கள் குழந்தைகளின் உரிமைகள் மீறப்பட்டுள்ளது. அனைத்து பெண்களும் இப்போது பள்ளிக்கு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். இந்த திறமையான, புத்திசாலியான இளம் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டால் அதன் விளைவுகள் பல தலைமுறைகளுக்கு பாதிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி தடை நீக்க வேண்டும்: தலிபான்களுக்கு ஐநா அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: