பொருளாதார ரீதியாக மற்றும் பிற அரசியல் காரணங்களுக்காக பிரச்னைகளை எதிர்கொண்டுள்ள கியூபா, நிகாராகுவா, ஹைதி, வெனிசுலா ஆகிய நாடுகளை சேர்ந்த ஏராளமானோர் அமெரிக்காவில் சட்ட அங்கீகாரத்துடன் தங்கி உள்ளனர். கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு சட்ட அங்கீகாரத்துடன் அமெரிக்காவில் தங்கியிருக்க முந்தைய ஜோ பைடன் அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் அனுமதி வழங்கியது.
இந்நிலையில் கியூபா, நிகாராகுவா, ஹைதி மற்றும் வெனிசுலா நாடுகளை சேர்ந்தவர்களுக்கு சிஎச்என்வி திட்டத்தின்கீழ் பைடன் நிர்வாகம் வழங்கிய சட்ட அங்கீகாரத்தை நாளை மறுதினம் முதல்(25ம் தேதி) திரும்ப பெற டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி கியூபா – 1,10,900, ஹைதி – 2,13,000, வெனிசுலா – 1,20,700 மற்றும் நிகாராகுவா – 93,000 உள்பட 5,32,000 பேருடைய சட்ட அங்கீகாரம் திரும்ப பெறப்பட உள்ளது. இவர்கள் அனைவரும் புலம் பெயர்ந்த மக்களுக்கான சட்ட அங்கீகாரத்தை டிரம்ப் அரசிடம் இருந்து மீண்டும் பெற வேண்டும். அவ்வாறு பெறவில்லையெனில் ஏப்ரல் 24ம் தேதிக்கு மேல் அமெரிக்காவில் வசிக்க அனுமதி அளிக்கப்படாது என அறிவிப்பு வௌியாகி உள்ளது.
The post அமெரிக்காவில் இருந்து ஒரே மாதத்தில் 5 லட்சம் பேரை நாடு கடத்த டிரம்ப் திட்டம் appeared first on Dinakaran.