சீன ராணுவ மருத்துவமனைகளில் டீப் சீக் ஏஐ

பீஜிங்: ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிக முதலீடுகளை செய்து வரும் சீனா சில மாதங்களுக்கு முன் டீப் சீக் என்ற செயலியை உருவாக்கியது. சீன ராணுவ ஆராய்ச்சி குழு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்க கூடிய ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. ஆனால் சீன ராணுவ நாளிதழ் கடந்த ஜனவரி மாதம் வௌியிட்ட கட்டுரை ஒன்றில், “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களால் போர்க்களங்களில் மனிதர்கள் போன்று செயல்பட முடியாது. போர்க்களத்தில் மனிதர்களால் மட்டுமே சூழலுககு ஏற்ப முடிவுகளை எடுக்க முடியும்.

மனிதர்கள் இடும் கட்டளைக்கு மட்டுமே ஏஐ ரோபோ செயல்பட முடியும்” என தெரிவித்திருந்தது. இந்நிலையில் சீன ராணுவ மருத்துவமனைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவான டீப் சீக் செயலியை சீன ராணுவம் பயன்படுத்த தொடங்கி உள்ளது. மருத்துவர்களுக்கான சிகிச்சை திட்டங்களை பரிந்துரைப்பது, மருத்துவ உதவிகள் வழங்குவது போன்ற சிகிச்சை அல்லாத செயல்பாடுகளுக்கு டீப் சீக் செயலி பயன்படுத்தப்படுவதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது.

The post சீன ராணுவ மருத்துவமனைகளில் டீப் சீக் ஏஐ appeared first on Dinakaran.

Related Stories: