டகார்: செனிகல் நாட்டில் ஜிகாதி குழு நடத்திய தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர். செனிகல் நாட்டில் மேற்கு நைஜர், மற்றும் அண்டை நாடுகளான மாலி மற்றும் பாசோவுடனான மூன்று நாடுகளின் எல்லைக்கு அருகில் உள்ள பம்பிட்டா கிராமத்தில் நேற்று முன்தினம் ஜிகாதி குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வெள்ளியன்று பிற்பகல் 2 மணியளவில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திக்கொண்டு இருந்தனர்.
அப்போது துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் கும்பல் பம்பிட்டாவில் மசூதியை சுற்றி வளைத்து அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. அங்கிருந்து செல்லும்போது அந்த பகுதியில் இருந்து வீடுகள் மற்றும் கடைகளுக்கு தீவைத்து சென்றது. இந்த சம்பவங்களில் குறைந்தது 44 பேர் உயிரிழந்துள்ளனர். 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். 44 பேர் பலியான நிலையில் 3 நாள் நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post செனிகல் நாட்டில் மசூதியை சுற்றிவளைத்து தீவிரவாதிகள் தாக்குதல்: 44 பேர் பலி appeared first on Dinakaran.