பாகிஸ்தானின் துவக்க வீரர் ஹசன் நவாஸ் 44 பந்துகளில் சதம் விளாசி, குறைந்த பந்துகளில் சதமடித்த பாகிஸ்தான் வீரர் என்ற அரிய சாதனையை படைத்துள்ளார். அவர், 45 பந்துகளை சந்தித்து 105 ரன் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். அவரது ஸ்கோரில், 7 சிக்சர்கள், 10 பவுண்டரிகள் அடங்கும். இதற்கு முன், டி20 போட்டிகளில் பாகிஸ்தானின் பாபர் அஸம் 49, அஹமது ஷெஸாத் 58 பந்துகளில் சதம் விளாசியுள்ளனர்.
The post 3வது டி20யில் நியூசி தோல்வி: 44 பந்துகளில் சதமடித்து பாக். வீரர் ஹசன் சாதனை appeared first on Dinakaran.