இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 8ம் தேதி ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பணியை இந்த நிறுவனம் மேற்கொண்டது. அதன் பிறகு முதல் ரயிலினை கடந்த செப்டம்பர் 22ம் தேதி தயாரித்து முடித்ததாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் தயாரிக்கப்பட்டுள்ள ஓட்டுனர் இல்லாத முதல் மெட்ரோ ரயிலினை பூந்தமல்லியில் உள்ள மெட்ரோ பணிமனையில் சோதனை ஓட்டத்திற்காக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர்.
அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள 3 பெட்டிகள் அடங்கிய முதல் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று மாலை 4.30 மணிக்கு தொடங்க உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் இயக்குவது தாமதமாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
மாலை 6.30 மணி அளவில் ரயில் செல்லும் தண்டவாளத்தில் மேலே உள்ள மின்சார கம்பிகள் அறுந்தது. சிறிது நேரத்தில் தண்டவாளத்தின் அருகே இருந்த மின்சார பெட்டி வெடித்து தீப்பொறி கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ரயில் பெட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திலும் மின்சார வயர்களில் தீப்பொறிகள் எழுந்தன. ரயில் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் அதை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. கோளாறு சரி செய்வதிலும் பழுது நீக்குவதிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
The post ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் மின்சார பெட்டி வெடித்து தீப்பொறி கிளம்பியதால் நிறுத்தம் appeared first on Dinakaran.