பெங்களூரு: உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த தீப்ராஜ் சந்திரா(36) பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கிரிப்டோகரன்சி அக்கவுன்ட் மூலம் பணம் பெற்றிருப்பதைத் தெரிந்துகொண்ட ராணுவ புலனாய்வு மற்றும் மாநில புலனாய்வு அமைப்புகள், தீப்ராஜ் சந்திராவை ரகசியமாகக் கண்காணித்தனர். அப்போது, தொலைத்தொடர்பு, ரேடார் சிஸ்டம்ஸ் குறித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உளவுத்துறைக்கு பணத்திற்காக விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாட்ஸ் அப், டெலிகிராம், இ-மெயில் மூலம் தகவல்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்திருக்கிறார். அவரை கைது செய்து விசாரணை நடத்தப்படுகிறது.
The post பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் பெல் நிறுவன பொறியாளர் கைது appeared first on Dinakaran.