ஐக்கிய அரபு எமிரேட்சில் 25 இந்தியர்களுக்கு மரண தண்டனை

புதுடெல்லி: மாநிலங்களவையில் நேற்று, ஒன்றிய வௌியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கூறுகையில், “ஒன்றிய அமைச்சகத்திடம் உள்ள தகவல்களின் அடிப்படையில் வௌிநாட்டு சிறைகளில் விசாரணை கைதிகள் உள்பட 10,512 இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். வௌிநாட்டு சிறைகளில் உள்ள இந்தியர்கள் உள்பட வௌிநாட்டில் உள்ள அனைத்து இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு ஒன்றிய அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது.
மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகபட்சமாக 25 இந்தியர்களுக்கும், சவுதியில் 11 இந்தியர்களுக்கும், மலேசியாவில் 6 இந்தியர்களுக்கும், குவைத்தில் 3 இந்தியர்களுக்கும் மற்றும் இந்தோனேஷியா, அமெரிக்கா, கத்தார், ஏமன் ஆகிய நாடுகளில் தலா ஒரு இந்தியருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

The post ஐக்கிய அரபு எமிரேட்சில் 25 இந்தியர்களுக்கு மரண தண்டனை appeared first on Dinakaran.

Related Stories: