பந்தின் மீது எச்சிலை வைத்து தேய்க்கும்போது ஒரு புறம் அது லேசாக தேய்ந்து போகும். அப்போது பந்து நன்றாக ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். கொரோனாவின் போது விதிக்கப்பட்ட எச்சிலைப் பயன்படுத்தக் கூடாது என விதிக்கப்பட்ட இந்த விதியால் ரிவர்ஸ் ஸ்விங் என்பதே அழிந்து வருகிறது. இந்த நிலையில்தான் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் மன்னனான முகமது ஷமி இந்தக் கோரிக்கையை வைத்திருந்தார்.
எனவே, இந்த தடையை நடப்பு ஐபிஎல் தொடரில் நீக்குவதற்கான முயற்சியை எடுக்க உள்ளது. முதல் கட்டமாக இன்று நடக்க உள்ள பத்து அணிகளின் ஐபிஎல் கேப்டன்கள் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலான அணிகளின் கேப்டன்கள் இதற்கு ஆதரவாக பேசினால் இந்தத் தடையை நடப்பு ஐபிஎல் தொடரிலேயே நீக்க பிசிசிஐ முயற்சி செய்யும்.
The post ரிவர்ஸ் ஸ்விங் ஆகும் வகையில் ஐபிஎல் தொடரில் பந்தில் எச்சில் தடவ அனுமதி? appeared first on Dinakaran.