சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அந்த வகையில்,
வேளச்சேரி எம்.எல்.ஏ ஹசன் மௌலானா கோரிக்கைக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்
தரமணி பகுதியில் குடிநீர் பிரச்னை காரணமாக அடிக்கடி போராட்டம் வெடிக்கும் சூழல் உள்ளதால் நடவடிக்கை எடுக்குமாறு பேரவையில் வேளச்சேரி எம்.எல்.ஏ ஹசன் மௌலானா கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து அமைச்சர் கே.என்.நேரு தரமணி பகுதியில் குடிநீர் பிரச்னை தொடர்பாக அதிகாரிகளை அனுப்பி உடனடியாக தண்ணீர் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்தார். திருத்துறைப்பூண்டி முதல்நிலை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
ஜி.கே.மணி கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில்
ஸ்டான்லி நீர்தேக்கதொட்டி பகுதியில் பாலத்திற்கு ரூ. 2 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. நீர் தேக்கம் பகுதியில் கட்டப்படும் பாலம் என்பதால் பெரும் தொகை தேவைப்படுகிறது. திட்ட அறிக்கை தயார் செய்ததும் பணிகள் தொடங்கும்”
ஒகேனக்கல் – பென்னாகரம் வரை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்படுமா? ஜி.கே.மணி கேள்விக்கு அமைச்சர் பொன்முடி பதில்
ஒகேனக்கல் – பென்னாகரம் – தருமபுரி – திருப்பத்தூர் வரை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்படுமா?” என பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார். இதற்கு வனத்துறை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் தடையில்லா சான்று பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.ஒன்றிய அரசின் தடையில்லா சான்று பெற்றதும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறும். அவசியம் என்றால் வனங்களில் சாலை அமைக்க தேவையான பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். துறைகளுடன் இணைந்து பேசி இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் பதில் தெரிவித்தார்.
மற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படுமா ?:உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கேள்விக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதில்
மற்றுத்திறனாளிகளுக்ககு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படுமா ?” என உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், 2009-10 முதல், இரு கால்களும் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. 2024ம் ஆண்டு முதல் ஒருகால் பாதித்து, கைகள் நன்றாக இருக்கும் 18-65 வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான 1200 பணியிடங்களை நிரப்ப சிறப்பு தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடருக்குள்ளதாக தேர்வு தேதியை அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என பதில் தெரிவித்தார் .
சூலூர் மந்திகிரி கோயிலில் மண்டபம் கட்டப்படும்: உறுப்பினர் கந்தசாமி கேள்விக்கு சேகர்பாபு பதில்
சூலூர் தொகுதியில் உள்ள மந்திகிரி வேலாயுதசுவாமி கோயிலுக்கு ரூ.1 கோடியில் திருமண மண்டபம் கட்டப்படும். திருமண மண்டபம் கடும் பணி 3 மாதத்தில் தொடங்கப்படும். கோவை சூலூர் வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு மே மாதம் நடைபெறும்.
மருதமலை கோயிலில் பிரமாண்ட முருகன் சிலை: சேகர்பாபு பதில்
மருதமலை கோயிலில் உலகமே வியக்கும் வகையில் பிரம்மாண்ட முருகன் சிலை அமைக்கப்பட உள்ளது. மருதமலை கோயிலில் ரூ.37 கோடி மதிப்பில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்காலத்தில் கோவை வடக்கு தொகுதியில் நிச்சயம் அறநிலையத்துறை சார்பில் பாலிடெக்னிக் கல்லூரி அமையும். நேற்று கோபமாக இருந்த அம்மன் அர்ஜுனனுக்கு இன்று குளுமையான பதிலை தருகிறேன் என உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார்.
The post தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரம் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்..!! appeared first on Dinakaran.