தண்ணீர் தினத்தையொட்டி கிராம சபை கூட்டம்

திருப்பூர், மார்ச் 19: திருப்பூர் மாவட்டத்தில் தண்ணீர் தினத்தையொட்டி வருகிற 23ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியுள்ளார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளிலும் வருகிற 23ம் தேதி தண்ணீர் தினத்தை முன்னிட்டு அன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெற உள்ளது. இந்த கிராமசபை கூட்டத்தில் தண்ணீர் தினத்தின் கருப்பொருளை விவாதித்தல். கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சிகளின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 265 கிராம ஊராட்சிகளிலும் இது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. கிராம சபை கூட்டத்தை திறம்பட நடத்திட ஏதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பற்றாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே கிராம பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சியின் வாக்காளர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தொிவிக்கலாம்.

The post தண்ணீர் தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: