மறைமலைநகர் முதல் காயரம்பேடு வரை குண்டும் குழியுமான சாலை: வாகன ஓட்டிகள் கடும் தவிப்பு

செங்கல்பட்டு: மறைமலைநகர் முதல் காயரம்பேடு வரை குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் உட்புறத்தில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் மற்றும் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. மறைமலைநகர் வழியாக காயரம்பேடு வரை செல்லும் இந்த சாலையில் கூடலூர் கலிவந்தப்பட்டு, கடம்பூர் பகுதி என அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

இந்த சாலைகளை கடந்து மறைமலை நகர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வந்து செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என அனைவரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அவ்வப்போது ஏதோ கடமைக்காக ஜல்லிகற்களை கொட்டி சமன்படுத்தி தற்காலிக சாலைகள் அமைக்கப்படுகின்றன. அந்த தற்காலிக சாலையில் வாகனங்கள் தொடர்ந்து செல்வதால் மீண்டும் பள்ளங்கள் ஏற்பட்டு வருகின்றன.

ஜல்லி கற்கள் டயர்களில் குத்தி பஞ்சராகி வருவதோடு நாளாக நாளாக பள்ளங்கள் பெரிதாகி நிறைய விபத்துகள் ஏற்ப்படும் மரண பள்ளங்களாக மாறி வருகின்றன. எனவே இந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post மறைமலைநகர் முதல் காயரம்பேடு வரை குண்டும் குழியுமான சாலை: வாகன ஓட்டிகள் கடும் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: