தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி பொது விநியோகத் திட்டத்தின்கீழ் நியாய விலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள், சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில், பிஎச்எச் மற்றும் ஏஏஒய் குடும்ப அட்டை வைத்துள்ளவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை உறுதி செய்யும் நோக்கில், கைவிரல் ரேகை பதிவின் மூலம் உறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை பதிவு செய்யாத பிஎச்எச்(PHH) மற்றும் ஏஏஒய்(AAY) குறியீடு பெற்ற அட்டை வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், உடனடியாக சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று கைரேகை பதிவு செய்ய வேண்டும்.
மேலும், குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர் எவரேனும், காஞ்சிபுரம் மாவட்டம் அல்லது மாநிலத்திற்கு வெளியே பணிபுரிந்தால், அவர்கள் பணிபுரியும் மாவட்டம், மாநிலத்திற்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் IMPDS e-KYC மூலம் தங்களது கைரேகை பதிவினை இம்மாதம் 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post பிஎச்எச், ஏஏஒய் குடும்ப அட்டைதாரர்கள் 31ம் தேதிக்குள் உறுப்பினர் விரல்ரேகை பதிவு செய்ய வேண்டும்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.