வியாசர்பாடி பகுதியில் கள்ளச்சந்தையில் மது விற்றவர் கைது

பெரம்பூர்: வியாசர்பாடி பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்கப்படுவதாக வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன், அடிப்படையில் நேற்று முன்தினம் வியாசர்பாடி நேரு நகர் முதல் தெரு பகுதியில் ஒருவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் இருந்து சுமார் 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து பிடிபட்ட நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் வியாசர்பாடி நேரு நகர் பகுதியை சேர்ந்த சஞ்சய் (22) என்பதும், இவர் மதுக்கடைகள் மூடிய பிறகு நள்ளிரவில் கள்ளச்சந்தையில் மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து சஞ்சய் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வியாசர்பாடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட கவுதமபுரம் பகுதியில் கடந்த மாதம் 23ம் தேதி கோபி (29) என்ற நபரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டினர். இதில் ஏற்கனவே விநாயகம், விஜயன், முரளி என்கின்ற முனியா ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜங்கிலி ஆகாஷ் (23) என்பவரை நேற்று முன்தினம் வியாசர்பாடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post வியாசர்பாடி பகுதியில் கள்ளச்சந்தையில் மது விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: