வாங்கை வெளுத்து வாங்கி யங் சாம்பியன்: 2ம் முறை கோப்பை வென்றார்

பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனையை வீழ்த்தி, தென் கொரியா வீராங்கனை யங் ஆன் ஸே சாம்பியன் பட்டம் வென்றார். இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் போட்டிகள் நடந்து வந்தன. நேற்று முன்தினம் இரவு மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நடந்தது. இதில் நடப்பு சாம்பியனும் தென் கொரிய வீராங்கனையுமான யங் ஆன் ஸே, சீன வீராங்கனை வாங் ஸி யி மோதினர். இருவரும் சமபலத்துடன் மோதியதால் போட்டி கடுமையாக இருந்தது.

முதல் செட்டை வாங் கைப்பற்றினார். அடுத்த செட்டை, ஆக்ரோஷமாக ஆடிய தென் கொரிய வீராங்கனை வசப்படுத்தினார். அதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட் விறுவிறுப்பாக நடந்தது. கடைசியில் அந்த செட்டையும் யங் கைப்பற்றினார். அதனால், 21-13, 18-21, 21-18 என்ற செட் கணக்கில் தென் கொரிய வீராங்கனை யங் வென்று, 2வது முறையாக சாம்பியன் பட்டத்தையும் கோப்பையையும் கைப்பற்றினார். சாம்பியன் யங்கிற்கு ரூ. 87 லட்சமும், 2ம் இடம் பிடித்த வாங்கிற்கு ரூ.43 லட்சமும் பரிசுத் தொகையாக கிடைத்தது.

The post வாங்கை வெளுத்து வாங்கி யங் சாம்பியன்: 2ம் முறை கோப்பை வென்றார் appeared first on Dinakaran.

Related Stories: